சின்னப் பெண் ஒருத்தி……….
சின்னப் பெண் ஒருத்தி………………………
அந்தப் பெண் ..ஒடிலான உருவம் ..குச்சி குச்சியாய் கால் கைகள்.
பார்ப்பதற்கு பாவப்பட்ட தோற்றம்.
ஒரு சின்ன கடைக்குள் நான் வேறு ஒரு வேலைக்காக காத்திருந்தேன்..
அது மதிய நேரம் ஆகவே ஆட்கள் இல்லை….
அந்த கடையில் இருந்த ஒருவர் என் வேலைக் காரணமாக பக்கத்து கடைக்கு சென்று விட்டார்..இந்த பெண்பிள்ளை பாவம்போல அங்கே நின்று கொண்டிருந்தாள்…
அவளிடம் இதற்கு முன்னே இரண்டு முறை பேசி இருக்கிறேன்.
ஆனாலும் அது இரண்டு வார்த்தைகளுக்கு மேலே இருக்காது.
இப்போது அவள் மட்டும் இருப்பதால் அவளிடம் அவளைபற்றி தெரிந்து கொள்ள விசாரித்தேன்…
என்ன படித்திருக்கிறாய் என்று கேட்டேன்.
ப்ளஸ் டு என்றாள்…..அவள் ஊருக்கு போகும் பஸ் கட்டணத்தை பற்றி கேட்டேன் ..கூறினாள்…..அதுவே மாதம் அறு நூறு ரூபாய் வந்தது…
நெல்லை அருகே உள்ள ஒரு கிராமம்…
..நான் அந்த ஊருக்கு போயிருக்கிறேன்.ஆகவே அந்த ஊரில் எனக்கு தெரிந்தவர்களை பற்றி அவளிடம் விசாரித்தேன்…அவள் பதில் கூறினாள்…
….இப்போது கொஞ்சம் சகஜமான நிலைக்கு வந்திருந்தாள்..
என்னை உற்றுப் பார்த்து .
எங்கள் குடும்பம் மிகவும் வறுமையில் இருக்கிறது.அப்பா இல்லை.என் சம்பளத்தை வைத்துதான் சாப்பிடுகிறோம்.
மிகவும் கஷ்டமான ஒரு சூழ்நிலை என்றாள்…
நான் கனிவாக ..கடவுள் எல்லாவற்றையும் பார்த்து கொள்வார் மனதை தளரவிடாதே என்று கூறினேன்…
அவள் சினேகமாக சிரித்தாள்…
ஆனால் இத்தனை கஷ்டத்திலும் எனக்கு நல்லதும் நடந்திருக்கிறது என்றாள்…
ஆச்சரியத்துடன் என்னவென்று கேட்டேன்..
அடுத்த மாதம் எனக்கு திருமணம் நடக்க இருக்கிறது என்றாள்..
நான் வாழ்த்துக்கள் என்றேன்….
அவள்…….அதுவும் எங்கள் திருமணம் காதல் திருமணம்.
இரண்டு வருடமாக என்னை ஒருவர் காதலிக்கிறார்.
முதலில் நான் சம்மதிக்கவில்லை.ஆனால் அவரே என்வீட்டில் முறைப்படி வந்து என் அம்மாவிடம் பெண் கேட்டு என் அம்மாவின் சம்மதத்தை வாங்கி விட்டார்.
என்று சந்தோசமாக கூறினாள்……
என்னைப் போன்ற ஏழை பெண்களுக்கு திருமணம் நடக்குமா என்பதே சந்தேகம்.
நான் தினமும் இரவில் தனிமையாக இயேசப்பாவிடம் இதை சொல்லி சொல்லி அழுவேன்.
இயேசப்பா என்ன கைவிடவில்லை என்று சொல்லிவிட்டு ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தாள்
எனக்கு தூக்கி வாறிப்போட்டது..
அவள் அழுவதை பார்த்து அல்ல…
.அவள் இந்து சமயத்தை சேர்த்தவள் என்பதை நான் அறிவேன்.இதில் இயேசப்பா எப்படி இடையில் வந்தார்.. அழுது முடிக்கட்டும் என்று காத்திருந்தேன்…அவளிடமே கேட்கலாம் என்று .
.நீ இந்து பெண்தானே என்றேன்…
எங்கள் வீட்டில் எல்லோருமே இந்துக்கள்தான்.
நான் மட்டும்; கத்தேலிக்க கிறிஸ்தவளாய் கன்வர்ட் ஆகிவிட்டேன் என்றாள்..
எப்படி என்றேன்.
நான் படித்தது ஒரு கத்தோலிக்க மேல்நிலைப்பள்ளியில் என்றாள்
சரி..நி மணக்கபோகும் அவர் கிறிஸ்தவரா..?
என்றேன்..இல்லை அவர்
இந்துதான்..அப்படி யென்றால் அவருக்கு நீ கிறிஸ்தவளாய் இருப்பதில் சம்மதமா என்றேன்…..
எப்படி இருந்தாலும் திருமணம் நடந்தவுடன் அவரையும் நான் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள செய்வேன். அது என்னால் முடியும்..
திருமணம் முடிந்தவுடன் முதலில் இந்த பொட்டை அழித்துவிடுவேன்.என்று தன் நெற்றியில் இருக்கும் பொட்டை காட்டினாள்…
அது மட்டுமல்ல கடவுள் எனக்கு செய்யத எல்லா நன்மைகளையும் ஆலயத்தில் எல்லோருக்கும் (சாட்சியாக.).சொல்வேன்..என்றாள்….
இப்போது அவள் முகத்தை பார்த்தேன்..மிக சந்தோசமாக இருந்தாள்….
அந்தக்கடையில் ரிப்பேர் பண்ண நான் கொடுத்திருந்த பொருள் என் கைக்கு வந்து விட்டது..
அவளிடம் அவள் திருமணத்திற்கு வாழ்த்து கூறிவிட்டு கிழம்பினேன்..
அவள் என்னிடம் சந்தோசமாக விடைகொடுத்தாள்….
திடிரென்று என்ன நினைத்தாளோ..
நீங்கள் போலீஸ் வேலைக்கு சேர்ந்திருக்கலாம்..என்று எனக்கு ஜடியா கொடுத்தாள்..(..என் உருவத்தை பார்த்து என்று நினைக்கிறேன்..)
கடையை விட்டு ரோட்டுக்கு வந்து என் பைக் அருகில் நின்று கொண்டு யோசித்தேன்……
.இப்போது நடந்திருப்பது சாதாரண சம்பவம் அல்ல..ஒரு பெண் மனம் மாறுவது என்பது மிகவும் பெரிதான செயல்….அவள் சந்ததியாக …சந்ததியாக பல லட்சம் பேர் பின் நாட்களில் கிறிஸ்துவுக்காக வரலாம்…
இதெல்லாம் எப்படி நடக்கிறது…….
இயேசுகிறிஸ்துவின் மேல் பாசமும் பக்தியும் கொண்டு சாட்சியாக வாழவேண்டும் என்று வைராக்கியம் கொண்டுள்ள அந்த சின்ன பெண்ணுக்காக ஒரு நிமிடம் ஆண்டவருக்கு நன்றி செலுத்தினேன்….
எனக்கு வேதத்தில் ஒரு வசனம் நினைவுக்கு வந்தது….
கர்த்தர் எலியாவைப் பார்த்து …
.பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும் அவனை முத்தஞ்செய்யாதிருக்கின்ற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்றார்……….
இது இந்தியாவுக்கும் பொருந்தும் தானே என்று நினைத்து கொண்டு என் வழியே போனேன்……….